/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
/
பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : மே 26, 2025 02:35 AM

சேலம்: சேலம், நெடுஞ்சாலை நகரில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வீடு உள்ளது. அவர், கோவையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, நேற்று மாலை, 4:30 மணிக்கு வீடு திரும்பினார்.
அவரது வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக, சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் மிரட்டல் விடுக்கப்பட்டது. உடனே அங்கிருந்து, சேலம் மாநகர போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது.
இரவு, 7:00 மணிக்கு வெடிகுண்டு தடுப்பு பிரிவினர், மெட்டல் டிடெக்டர் கருவி, மோப்ப நாய் உதவியுடன், பழனிசாமி வீடு வளாகம் முழுதும் சோதனை செய்தனர். தொடர்ந்து, வீட்டை ஒட்டிய சாலையிலும் சோதனை நடந்தது. எதுவும் சிக்காததால், ஒரு மணி நேரத்துக்கு பின் வெடிகுண்டு நிபுணர்கள் திரும்பினர். சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர். பழனிசாமியின் சென்னை வீட்டிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.