/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலத்தில் தொடங்கியது புத்தக திருவிழா
/
சேலத்தில் தொடங்கியது புத்தக திருவிழா
ADDED : நவ 30, 2024 02:33 AM
சேலம்: சேலம், புது பஸ் ஸ்டாண்ட் மைதானத்தில், மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய பதிப்பாளர்கள் சங்கம்(பபாசி) சார்பில் புத்தக திரு-விழா நேற்று தொடங்கியது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்-திரன் துவக்கி வைத்தார். மாலையில் நடந்த துவக்க விழாவில், கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். மாநகராட்சி கமி-ஷனர் ரஞ்ஜீத்சிங் வரவேற்றார்.
அமைச்சர் ராஜேந்திரன் பேசியதாவது:
நம்மை நாமே செதுக்கிக்கொள்ள உதவும் ஆயுதமாக, புத்தகங்கள் உள்ளன. ஒரு நுாலகம் திறக்கப்பட்டால், ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது என, முன்னோர் தெரிவித்துள்ளனர். அதற்கேற்ப துணை முதல்வர் உதயநிதி, தமிழகத்தின், 234 சட்டசபை தொகு-திகளிலும் நுாலகம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். புத்-தகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஈ.வெ.ரா., ஏற்படுத்திய அறிவு புரட்சியை, அண்ணாதுரை, கருணாநிதி என, தமிழக தலைவர்கள் தொடர்ந்து ஏற்படுத்தினர். மகாத்மா காந்தியிடம், 1 கோடி ரூபாய் கொடுத்தால் என்ன செய்வீர்கள் என கேட்டதற்கு, அவர் நுாலகம் அமைப்பேன் என கூறியுள்ளார். அறிவை பெருக்-கிக்கொள்ளவும், பண்போடு வாழ்வை அமைத்துக்கொள்ளவும் நுால்கள் உதவுகின்றன. கடந்த ஆண்டு சேலத்தில் நடந்த புத்தக திருவிழாவில், 2.12 கோடி ரூபாய் மதிப்பில், 1.82 லட்சம் விற்ப-னையாகின.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், பா.ம.க.,-எம்.எல்.ஏ., அருள், கூடுதல் கலெக்டர் லலித் ஆதித்ய நீலம், 'பபாசி' லோகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, 'காகிதத்தில் கரைவோம்' தலைப்பில், மதுரை ராமகி-ருஷ்ணன் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. மேலும், ஏற்காடு இளங்கோ எழுதிய, '117வது ஆழ்கடல் ஆய்வு' எனும் புத்தகம் வெளியிடப்பட்டது.
கண்காட்சியில், 225 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், 216வது அரங்கில், 'காலைக்கதிர்' நாளிதழின் மாணவர் பதிப்-பான, 'பட்டம்' இதழ் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, 'தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தின் புத்தகங்கள், 10 சதவீத தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படு-கின்றன. டிச., 9 வரை, தினமும் காலை, 10:00 முதல் இரவு, 9:00 மணி வரை அரங்குகளை பார்வையிடலாம். மாலையில், மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேச்சாளர்களின் கருத்தரங்கம், பட்டிமன்றங்கள் நடக்கின்றன. அனுமதி இலவசம். மேலும் பள்ளி மாணவர்களுக்கு புத்தக விற்-பனையில் பிரத்யேக தள்ளுபடி உள்ளது. தினமும் பள்ளி, கல்-லுாரி மாணவர்களை, பஸ்சில் இலவசமாக அழைத்து வந்து பார்-வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.