/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நவ., 29ல் சேலத்தில் புத்தக திருவிழா
/
நவ., 29ல் சேலத்தில் புத்தக திருவிழா
ADDED : அக் 29, 2024 01:18 AM
நவ., 29ல் சேலத்தில்
புத்தக திருவிழா
சேலம், அக். 29-
சேலத்தில் புத்தக திருவிழா நவ.,29ல் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கலெக்டர் பிருந்தாதேவி பேசுகையில், ''இந்தாண்டு புத்தக திருவிழா நவ., 29ல் துவங்கி டிச., 9 வரை, 11 நாட்கள் நடத்தப்படுகிறது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் பங்கேற்கும் விழாவில், 150க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படுகிறது. குறிப்பாக சாகித்ய அகாதமி, ஞானபீடம் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் பெறப்பட்ட புத்தகங்கள், ஓலைச்சுவடி, செப்பேடுகள், கல்வெட்டுகள், சிறந்த புகைப்படங்கள், அறிவியல் கண்காட்சி உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. கண்காட்சி காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை நடைபெறும், புத்தக ஆர்வலர்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்று பயன் பெற வேண்டும்,'' என்றார்.
கூடுதல் கலெக்டர் லலித் ஆதித்ய நீலம், வருவாய் அலுவலர் மேனகா, ஆர்.டி.ஓ., அபிநயா, நுாலக அலுவலர் விஜயகுமார், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க செயலாளர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.