/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வீட்டுமனை பட்டா கேட்டு'பூம் பூம் மாட்டுக்காரர்கள் தர்ணா
/
வீட்டுமனை பட்டா கேட்டு'பூம் பூம் மாட்டுக்காரர்கள் தர்ணா
வீட்டுமனை பட்டா கேட்டு'பூம் பூம் மாட்டுக்காரர்கள் தர்ணா
வீட்டுமனை பட்டா கேட்டு'பூம் பூம் மாட்டுக்காரர்கள் தர்ணா
ADDED : பிப் 23, 2024 01:59 AM
ஆத்துார்:தலைவாசல் ஏரிக்கரையில், 'பூம் பூம்' மாட்டுக்காரர்களான, 36 குடும்பத்தினர், 50 ஆண்டுகளுக்கு மேல் குடிசைகள் அமைத்து வசித்து வருகின்றனர். இவர்கள் சில ஆண்டுகளாக இலவச வீட்டுமனை பட்டா, ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மனு அளித்து வருகின்றனர்.நேற்று ஆத்துார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், கலெக்டர் பிருந்தாதேவி ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த, பூம் பூம் மாட்டுக்காரர்கள், குடம், சமையல் பாத்திரங்களுடன் அமர்ந்து, தர்ணாவில் ஈடுபட்டனர்.
தலைவாசல் தாசில்தார் அன்புசெழியன், ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் பேச்சு நடத்தியும் பலனில்லை. பின் கலெக்டர் பிருந்தாதேவி, பேச்சு நடத்தினார். அவர், 'ஆர்.டி.ஓ., உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்த பின், வீட்டுமனை பட்டா விரைவில் வழங்கப்படும். 'எஸ்.டி., - ஆதியன்' ஜாதிச்சான்றிதழ் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். இதனால் அனைவரும் கலைந்து சென்றனர்.