/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
திரவுபதி அம்மன் கோவிலில்வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
/
திரவுபதி அம்மன் கோவிலில்வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
ADDED : மே 04, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்:ஆத்துார், தாயுமானவர் தெருவில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், 3 ஆண்டுக்கு ஒருமுறை தீ மிதி, தேர் திருவிழா நடக்கிறது. அதன்படி வரும் 16ல், தீ மிதி விழா, 17ல் தேர் திருவிழா நடக்க உள்ளது.
இதை முன்னிட்டு நேற்று, வில்லிசை புகழ் மாதவியின், வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. அதில் அம்மன் பிறப்பு, அம்மனின் புகழ் குறித்து மாதவி பாடினார். ஏராளமானோர் கண்டுகளித்தனர். முன்னதாக அம்மனுக்கு பல்வேறு அபிேஷக பூஜை நடந்தது. அப்போது மூலவர், வைஷ்ணவி அலங்காரத்தில் தங்க கவசம், புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார்.