/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மூதாட்டியை குத்திக்கொன்ற சிறுவன் கைது தடயங்களை மறைத்த தாயும் சிக்கினார்
/
மூதாட்டியை குத்திக்கொன்ற சிறுவன் கைது தடயங்களை மறைத்த தாயும் சிக்கினார்
மூதாட்டியை குத்திக்கொன்ற சிறுவன் கைது தடயங்களை மறைத்த தாயும் சிக்கினார்
மூதாட்டியை குத்திக்கொன்ற சிறுவன் கைது தடயங்களை மறைத்த தாயும் சிக்கினார்
ADDED : ஜன 31, 2025 02:38 AM
வீரபாண்டி: மூதாட்டியை கொன்ற வழக்கில் பிளஸ் 1 படிக்கும், 17 வயது சிறுவன், அவனது தாயை, போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் சீரகாபாடி, மதுரையான்காட்டில், தனியே வசித்த சின்னத்தாயி, 88, கடந்த, 26 இரவு கொலை செய்யப்-பட்டு கிடந்தார். அவரது மகள் சின்னரசி புகார்படி, ஆட்டையாம்-பட்டி போலீசார், அப்பகுதியில் இருந்த, கண்காணிப்பு கேம-ராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், சம்பவத்தன்று இரவு, 11:20 மணிக்கு, மூதாட்டி வீடு அருகே ஒருவர் வந்து சென்றதும், அவரது கையில் துணியால் சுற்றப்பட்ட பொருளை எடுத்துச்சென்றதும் பதிவாகியிருந்தது. விசாரணையில் அவர், மூதாட்டி வீடு அருகே வசிக்கும், 17 வயது பிளஸ் 1 படிக்கும் மாணவர் என்பதும் தெரிந்தது. விசாரணைக்கு பின், நேற்று முன்-தினம், சிறுவனையும், அவரது தாயையும் போலீசார் கைது செய்-தனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது: சிறுவனின் தந்தை, 10 ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். சிறுவனின் தாயார், 7 ஆண்டுக-ளாக அரியானுாரில் ஓட்டல் நடத்துகிறார். கொலை செய்யப்-பட்ட சின்னத்தாயி, அக்கம் பக்கத்தினர் வீடுகளுக்கு சென்று சகஜ-மாக பேசுவார். அப்படி சிறுவனின் வீட்டுக்கு சென்றபோது, பள்-ளிக்கு செல்லாமல் இருந்ததை கண்டித்துள்ளார். சில நேரம், நண்-பர்கள், அக்கம் பக்கத்தினர் மத்தியில், சிறுவனை திட்டி, சின்னத்-தாயி அறிவுரை வழங்கியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சிறுவன், ஓட்டலில் இறைச்சி வெட்ட பயன்படுத்தும் கத்தியால், மூதாட்டியை குத்தி கொன்றுள்ளார். பின் வீட்டுக்கு வந்த அவரது சட்டையில், ரத்தக்கறை இருந்தது. இதுகுறித்து அவரது தாயார் கேட்டபோது, சின்னத்தாயியை கொன்றதாக தெரிவித்துள்ளார். தடயங்களை மறைத்துவிட்டு, மகனை அழைத்துக்கொண்டு தாயார் புதுச்சேரி சென்றார். கேமரா காட்சிகளை வைத்து விசார-ணைக்கு அவர்களை அழைத்ததால் வந்தனர். பின் உண்மையை ஒப்புக்கொண்டனர். இதனால் இருவரையும் கைது செய்து, தாயை சிறைக்கும், மகனை அரசு காப்பகத்துக்கும் அனுப்பி-யுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

