ADDED : ஜூலை 11, 2024 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே பச்சமலையை சேர்ந்த, கூலித்தொழிலாளி சதீஷ், 30.
இவரும் மனைவி மீனாவும், நாகியம்பட்டி சுந்தரவ-தனம் தோட்டத்தில் கூலி வேலை செய்கின்றனர். நேற்று அத்-தோட்டத்தில் பெற்றோர் பணியில் ஈடுபட்டபோது, அவரது மகன் வருண், 5, விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது பாம்பு தீண்டி மயங்கிய சிறுவனை, பெற்றோர், ஆத்துார் அரசு மருத்துவ-மனையில் சேர்த்தனர். அங்கு வருண் உயிரிழந்தான். தம்மம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.