/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கிணற்றில் குளித்த சிறுவன் உயிரிழப்பு
/
கிணற்றில் குளித்த சிறுவன் உயிரிழப்பு
ADDED : ஏப் 19, 2025 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:
சேலம், அம்மாபேட்டை, சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த மூர்த்தி மகன் பரணிதரன், 15. இவர், 10ம் வகுப்பு படித்துள்ள நிலையில், நேற்று மதியம் நண்பர்களுடன் மாசிநாயக்கன்பட்டியில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார்.
நீச்சல் தெரியாத பரணிதரன், நீரில் மூழ்கி பலியானார். நண்பர்கள் கூச்சலிட்டனர். பின் மக்கள் தகவல்படி, செவ்வாய்பேட்டை தீயணைப்பு வீரர்கள் வந்து, பரணிதரன் உடலை மீட்டனர். அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

