/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தடுப்பூசி போடாததால் ரேபிஸ் அறிகுறி ஓராண்டுக்கு முன் நாய் கடித்த சிறுவன் சாவு
/
தடுப்பூசி போடாததால் ரேபிஸ் அறிகுறி ஓராண்டுக்கு முன் நாய் கடித்த சிறுவன் சாவு
தடுப்பூசி போடாததால் ரேபிஸ் அறிகுறி ஓராண்டுக்கு முன் நாய் கடித்த சிறுவன் சாவு
தடுப்பூசி போடாததால் ரேபிஸ் அறிகுறி ஓராண்டுக்கு முன் நாய் கடித்த சிறுவன் சாவு
ADDED : மார் 31, 2025 02:15 AM
சேலம்: சேலம், வீராணம் அருகே வலசையூரை சேர்ந்த முனுசாமி மகன் கிஷோர், 9. அங்குள்ள அரசு பள்ளியில், 4ம் வகுப்பு படித்தான். இவனை, ஓராண்டுக்கு முன், வீட்டின் வளர்ப்பு நாய் கடித்தது. ஆனால் தடுப்பூசி போடவில்லை. கடந்த, 28ல், ரேபிஸ் நோய் அறிகுறி தென்பட்டதால், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்-கப்பட்டான். ஆனால் நேற்று முன்தினம் உயிரிழந்தான். வீராணம் போலீசார், சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
விழிப்புணர்வு தேவை
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சிறுவன் கையில், ஓராண்டுக்கு முன் நாய் கடித்தது. தடுப்பூசி போடாமல் குடும்பத்தினர் அஜாக்கிரதையாக விட்டுவிட்டனர். அதற்கு பின்பும் அந்த நாய் சிறுவனை கடித்ததா என தெரியவில்லை. சமீ-பத்தில் சிறுவனுக்கு ரேபிஸ் நோய் அறிகுறிகளான தண்ணீரை பார்த்தால் பயம், காற்றுக்கு பயந்து நடுங்குதல் உள்ளிட்ட அறிகு-றிகள் ஏற்பட்டன. கடந்த, 28ல் கடும் தலைவலி, காய்ச்சல் ஏற்-பட்டு உயிரிழந்தான்.இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க மக்கள் விழிப்பு-ணர்வுடன் இருக்க வேண்டும். குறிப்பாக வீட்டில் வளர்க்கப்-படும் நாய் மற்றும் வளர்ப்போர், ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். ஏனெனில் நாயின் நாக்கில் இருந்து வரும் உமிழ்நீர் மூலம் ரேபிஸ் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் நாய்கள் கடித்தால் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்-கொள்ள வேண்டும். பள்ளிகளுக்கு விடுமுறை தொடங்கியதால் சிறுவர்கள் நாய்களுடன் நேரத்தை போக்குவர். அதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.