/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அனைத்து கிராமங்களில் கிளை சங்கங்கள்; ஆறு நாட்டு வேளாளர் ஆலோசனை
/
அனைத்து கிராமங்களில் கிளை சங்கங்கள்; ஆறு நாட்டு வேளாளர் ஆலோசனை
அனைத்து கிராமங்களில் கிளை சங்கங்கள்; ஆறு நாட்டு வேளாளர் ஆலோசனை
அனைத்து கிராமங்களில் கிளை சங்கங்கள்; ஆறு நாட்டு வேளாளர் ஆலோசனை
ADDED : நவ 11, 2024 07:08 AM
சேலம் : ஆறு நாட்டு வேளாளர் தலைமை சங்கம் சார்பில், 80வது வருடாந்திர பொதுக்குழு கூட்டம் சீலநாயக்கன்பட்டியில் நேற்று நடந்தது.
தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ரவி முன்னிலை வகித்தார்.அதில், 2023 ஏப்., 1 முதல், 2024 மார்ச், 31 வரையான ஓராண்டு கால நடவடிக்கைகள் குறித்து நிர்வாக சபை அறிக்கை வாசிக்கப்பட்டது. வரவு செலவு கணக்கு, தணிக்கையாளர்களின் அறிக்கை தாக்கல் செய்தனர். தொடர்ந்து தணிக்கையாளர் நியமனம், கமிட்டி அமைப்பது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
தவிர அனைத்து கிராமங்களிலும் கிளை சங்கங்கள் அமைப்பது குறித்தும், உறுப்பினர்கள் கொடுத்த தீர்மானங்களை பரிசீலனை செய்து நடைமுறைப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. செயலர் சதீஸ்வரன், பொருளாளர் செந்தில்குமார் உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.