/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பக்தர்கள் தலையில் தேங்காய் உடைப்பு
/
பக்தர்கள் தலையில் தேங்காய் உடைப்பு
ADDED : மார் 08, 2024 03:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி;இடைப்பாடி அருகே கவுண்டம்பட்டி, சின்னமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம், 20ல் தொடங்கியது.
நேற்று அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து கவுண்டம்பட்டியில் உள்ள சரபங்கா ஆற்றில் அலகு குத்திக்கொண்டு, கவுண்டம்பட்டி முழுதும் சுவாமி ஊர்வலம் நடந்தது.இதில், ஏராளமான பெண்கள், தேங்காய் வைத்து மாவிளக்கு தட்டுடன் பங்கேற்றனர். அப்போது சுவாமி சிலை முன் அமர்ந்த பக்தர்களின் தலையில், தேங்காய்களை, பூசாரி உடைத்தார். தலையில் தேங்காய் உடைத்தால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் ஏராளமானோர் தலையில், பூசாரி, தேங்காய்களை உடைத்தார். மேலும் திரளான பக்தர்கள் தரிசனம்
செய்தனர்.

