/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் 3 இடங்களில் உடைப்பு
/
கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் 3 இடங்களில் உடைப்பு
கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் 3 இடங்களில் உடைப்பு
கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் 3 இடங்களில் உடைப்பு
ADDED : பிப் 20, 2025 07:20 AM
இடைப்பாடி: இடைப்பாடி - ராசிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம், 10 லட்-சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகி-றது. இத்திட்ட பராமரிப்பு பணிகளை, குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரர்கள் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் கொங்க-ணாபுரம் அருகே எருமைப்பட்டி, கன்னந்தேரி, வெள்ளாண்டிவ-லசு ஆகிய பகுதிகளில், அந்த கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு, ஒரு வாரமாக தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் அப்பகுதி சாலையும் சேதம் அடைகிறது. அதனால் சம்-பந்தப்பட்ட அதிகாரிகள், குழாயை சீரமைக்க உடனே நடவ-டிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர்.
20 நாட்கள்
அதேபோல் ஆட்டையாம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் முன், ராசி-புரம் சாலை மேட்டுக்கடை முதல் திருச்செங்கோடு பிரதான சாலை மருளையம்பாளையம் வரை, குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ஒரு மாதத்துக்கு முன், சாலையில் பள்ளம் தோண்டி குழாய் பதிப்பு பணி நடந்தது. அதில் போலீஸ் ஸ்டேஷன் முன் பள்ளம் தோண்டும்போது, ஏற்கனவே குடிநீர் வினியோகம் செய்து வரும் கூட்டுக்குடிநீர் திட்ட பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டது. 20 நாட்களுக்கு மேலாகியும் உடைப்பை சரிசெய்யா-ததால், தொடர்ந்து குடிநீர் வெளியேறி, பள்ளம் தோண்டி அரைகு-றையாக மூடியதால், அப்பகுதி சேறு, சகதியாக மாறிவிட்டது. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். அதனால் குழாய் உடைப்பை சரிசெய்ய, அதிகாரிகள் நடவ-டிக்கை எடுக்க வேண்டும்.

