/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'39 நிதியுதவி பள்ளிகளில் விரைவில் காலை உணவு'
/
'39 நிதியுதவி பள்ளிகளில் விரைவில் காலை உணவு'
ADDED : ஜூன் 20, 2025 01:51 AM
சேலம், முதல்வரின் காலை உணவு திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம், சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில், நேற்று நடந்தது. அதில் கமிஷனர் இளங்கோவன் பேசியதாவது:
சேலம் மாநகராட்சியில் உள்ள, 39 அரசு நிதியுதவி பெறும் துவக்கப்பள்ளிகளிலும், விரைவில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள்,
மண்டல வாரியாக அமைக்கப்பட்டுள்ளன. சூரமங்கலம் மண்டலத்துக்கு டாக்டர்ஸ் காலனி, அஸ்தம்பட்டி மண்டலத்துக்கு மணக்காடு சமுதாய கூடம், அம்மாபேட்டை மண்டலத்துக்கு வித்யாநகர் சமுதாய கூடம் மற்றும் களரம்பட்டி சமுதாய கூடம், கொண்டலாம்பட்டி மண்டலத்துக்கு காத்தாயம்மாள் நகர் சமுதாய கூடம் ஆகியவற்றில் உணவு தயாரிக்கப்பட்டு, பள்ளிகளுக்கு உரிய நேரத்தில் வினியோகம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
துணை கமிஷனர் பாலசுப்பிரமணியன், மாநகர பொறியாளர் செல்வநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.