ADDED : ஜூலை 27, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:சேலம், அஸ்தம்பட்டியில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில், முதுநிலை வரைவு அலுவலராக பணியாற்றியவர் ரவி, 55. இவர், சேலம், ஜாரி கொண்டலாம்பட்டி இருபாலர் மேல்நிலைப்பள்ளியில் மின்வேலை பணிக்கு, ஜூலை 22ல், ஒப்பந்ததாரர் சண்முகத்திடம், 1 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றபோது கையும், களவுமாக சிக்கினார்.
இவரையும், புரோக்கர் பிரகாஷையும் 45, சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். ரவியை, 'சஸ்பெண்ட்' செய்து, கண்காணிப்பு பொறியாளர் தவமணி உத்தரவிட் டார்.