/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பாலம் கட்டும் பணி மந்தம்: விரைந்து முடிக்க கோரிக்கை
/
பாலம் கட்டும் பணி மந்தம்: விரைந்து முடிக்க கோரிக்கை
பாலம் கட்டும் பணி மந்தம்: விரைந்து முடிக்க கோரிக்கை
பாலம் கட்டும் பணி மந்தம்: விரைந்து முடிக்க கோரிக்கை
ADDED : நவ 28, 2024 06:50 AM
வெண்ணந்துார்: வெள்ளைப்பிள்ளையார் கோவில் பகுதியில் தரைப்பாலம் கட்டு-மானப்பணி மந்தமாக நடப்பதால், 'பீக் ஹவர்'சில் கடும் போக்கு-வரத்து நெரிசல் ஏற்படுகிறது.
வெண்ணந்துார் ஒன்றியம், ஆட்டையாம்பட்டி - ராசிபுரம் செல்லும் பிரதான சாலை அளவாய்பட்டி பஞ்.,க்குட்பட்ட வெள்-ளைப்பிள்ளையார் கோவில் பகுதியில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், ஒரு மாதத்திற்கு
முன் தரைப்பாலம் கட்டும் பணி துவங்-கியது. தற்போது இப்பணி மிகவும் மந்தமாக நடக்கிறது.
இப்பகு-தியில், ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. மேலும், ராசிபுரத்தில் இருந்து
கோவை செல்ல இதுவே பிரதான சாலையாகும்.குறிப்பாக காலை, மாலையில், 'பீக் ஹவர்'சில் கடும்
போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, பொது-மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியரின் நலன்
கருதி பாலம் கட்டுமான பணியை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள்
கோரிக்கை விடுத்தனர்.