/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோனேரிப்பட்டியில் பாலம்; பா.ம.க., வலியுறுத்தல்
/
கோனேரிப்பட்டியில் பாலம்; பா.ம.க., வலியுறுத்தல்
ADDED : டிச 18, 2024 07:13 AM
சேலம்: பா.ம.க.,வின், மாணவர் சங்க மாநில செயலர் விஜயராஜா, மாவட்ட செயலர் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள், நேற்று, சேலம் கலெக்டர் பிருந்தாதேவியிடம் அளித்த மனு:
தம்மம்பட்டி டவுன் பஞ்சாயத்து, கோனேரிப்பட்டியில் சுவேத நதி செல்கிறது. அதன் வடக்கே உள்ள பெல்ஜியம் காலனி, பாரதிபுரம், கொண்டயம்பள்ளி, நாகியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல, நதியை கடந்து செல்ல வேண்டும். ஆற்றில் நீர் பெருக்கெடுத்து பாய்தோடும்போது, அப்பகுதிகளில் வசிக்கும், 5,000 பேர் சிரமப்படுகின்றனர். இதனால், 10 கி.மீ., சுற்றிச்செல்ல வேண்டியுள்ளது. இதனால் சுவேத நதி குறுக்கே பாலம் அமைக்க, தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.