/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பாலம் பணி தாமதம்; சர்வீஸ் சாலை சேதம்; ஊர்ந்து செல்லும் வாகனங்களால் நெரிசல்

ADDED : மே 23, 2024 07:23 AM
பனமரத்துப்பட்டி : மேம்பால பணி ஆமை வேகத்தில் நடக்கும் நிலையில் சர்வீஸ் சாலையும் சேதம் அடைந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையில் நிலவாரப்பட்டியில் மேம்பாலம் கட்டும் பணி நடப்பதால், 1 கி.மீ.,க்கு பிரதான சாலை மூடப்பட்டுள்ளது. இருபுறமும் உள்ள சர்வீஸ் சாலையில் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. 2 ஆண்டுக்கு மேலாக, மந்தகதியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. குறிப்பாக அதிகளவில் கனரக வாகனங்கள் இயக்கப்படுவதால், சர்வீஸ் சாலை சேதம் அடைந்தது. சாலையில் பள்ளமான இடத்தில் மண் கொட்டி சீரமைத்தனர். ஆனால் சில நாட்களாக பெய்த மழையால் சாலையில் அரிப்பு ஏற்பட்டு, மேடு, பள்ளமாக மாறியுள்ளது.
வாகனங்கள் சீராக செல்ல முடியாமல் ஊர்ந்தபடி செல்வதால் நெரிசல் ஏற்படுகிறது. சர்வீஸ் சாலை நடுவே உள்ள பள்ளத்தை தவிர்த்து, சாலையோரம் சில வாகனங்கள் ஒதுங்கி செல்கின்றன. அதனால் பின்னால் வரும் வாகனங்கள் தொடர்ந்து வர முடியாமல் நின்று நின்று செல்கின்றன. அவசரத்துக்கு, 'ஆம்புலன்ஸ்' கூட செல்ல முடியாத சூழல் உள்ளது. அதனால் சர்வீஸ் சாலையை உடனே சீரமைக்கவும், மேம்பால பணியை வேகப்படுத்தவும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.