/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தங்கை மாரியம்மனுக்கு 'ஆடி சீர்' வழங்கிய அண்ணன் அழகிரிநாதர்
/
தங்கை மாரியம்மனுக்கு 'ஆடி சீர்' வழங்கிய அண்ணன் அழகிரிநாதர்
தங்கை மாரியம்மனுக்கு 'ஆடி சீர்' வழங்கிய அண்ணன் அழகிரிநாதர்
தங்கை மாரியம்மனுக்கு 'ஆடி சீர்' வழங்கிய அண்ணன் அழகிரிநாதர்
ADDED : ஆக 04, 2025 08:19 AM
சேலம்: சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவில் நிர்வாகம், ஆடி சீர் கட்டளைதாரர், பக்தர்கள் சார்பில், ஆடிப்பெருக்கு நாளில், பெருமாளின் தங்கையான கோட்டை மாரியம்மனுக்கு சீர் வரிசை பொருட்கள் வழங்கப்படும். அதன்படி நேற்று, கோட்டை மாரியம்மன் கோவில் உற்சவர் அம்மனை சப்பரத்தில் எழுந்தருளச்செய்து, அண்ணனிடம் சீர் பெற, வீதி உலாவாக, கோட்டை அழகிரிநாதர் கோவில் முன் வரச் செய்தனர்.
தொடர்ந்து அழகிரிநாதர் முன், புது பட்டுப்புடவை, வண்ண வளையல்கள், தேங்காய், பழம், பூ, இனிப்பு வகைகள் உள்ளிட்ட சீர் வரிசை பொருட்களை, ஏராளமான தட்டுகளில் வைத்து பூஜை செய்தனர். தொடர்ந்து சுவாமி முன் ஆசிர்வாதம் பெற்று, மேள, தாளம் முழங்க தட்டுகளை, பக்தர்கள் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்து, கோவில் முன் எழுந்தருளிய மாரியம்மனுக்கு வழங்கினர். அங்கு பூசாரிகள், புது புடவை, வளையல், மலர் மாலைகள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை, மாரியம்மனுக்கு அணிவித்து, அண்ணன் அழகிரிநாதர் ஆடி சீரை, அம்மன் பெற்றுக்கொண்டதாக தெரிவித்தனர். பின் மகா தீபாராதனையுடன் பூஜை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அழகிரிநாதர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வெங்டேஸ்வரி, மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல் உள்ளிட்ட உறுப்பினர்கள்,