sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஏரியில் மூழ்கி அண்ணன், தம்பி பலி

/

ஏரியில் மூழ்கி அண்ணன், தம்பி பலி

ஏரியில் மூழ்கி அண்ணன், தம்பி பலி

ஏரியில் மூழ்கி அண்ணன், தம்பி பலி


UPDATED : ஏப் 11, 2025 03:04 AM

ADDED : ஏப் 11, 2025 01:21 AM

Google News

UPDATED : ஏப் 11, 2025 03:04 AM ADDED : ஏப் 11, 2025 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி:வாழப்பாடி அருகே ஏரியில் மீன் பிடித்தபோது, தவறி விழுந்த தம்பியும், அவரை காப்பாற்ற முயன்ற அண்ணனும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த சின்னகவுண்டாபுரம், ஒட்டப்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் --- சந்தியா, தம்பதிக்கு தர்ஷன், 8, விஷால், 7 ஆகிய மகன்கள் இருந்தனர். அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில், இருவரும் முறையே 3, 2ம் வகுப்பு படித்தனர்.

இந்நிலையில், நேற்று மதியம் 3:00 மணிக்கு சகோதரர்கள், சந்தனப்புடையார் ஏரிக்கு, நண்பர்களுடன் மீன்பிடிக்க சென்றனர். அப்போது, ஏரி பள்ளத்தில் விஷால் தவறி விழுந்தார்.

அவரை காப்பாற்ற முயன்ற தர்ஷனும், பள்ளத்தில் விழுந்து நீரில் மூழ்கினார். தீவிர தேடுதலுக்கு பிறகு மாலை, 6:00 மணிக்கு இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us