/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அண்ணன், அண்ணி கொலை தம்பி உள்பட 2 பேருக்கு வலை
/
அண்ணன், அண்ணி கொலை தம்பி உள்பட 2 பேருக்கு வலை
ADDED : நவ 01, 2024 01:53 AM
கிருஷ்ணகிரி, நவ. 1-
நிலத்தகராறில் அண்ணன், அண்ணியை கொன்ற தம்பி உள்பட, 2 பேரை போலீசார் தேடுகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகே மோட்டூர், தலைவாசல் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து, 37. அவரது மனைவி ருக்மணி, 27. மாரிமுத்துவின் தம்பி முருகன், 35. இவரது மனைவி சிவரஞ்சனி, 24. முருகன் வீடு அருகே உள்ள மரத்தை, பாதைக்கு இடையூறாக இருந்ததாக, மாரிமுத்து வெட்டியுள்ளார். இதில் மாரிமுத்து, முருகன் இடையே தகராறு ஏற்பட்டது. அதில், 3 மாதங்களுக்கு முன் மாரிமுத்து, சிறை சென்று வந்துள்ளார். இந்நிலையில் முருகன் வீட்டுக்கு செல்லும் பாதையில், மாரிமுத்து வழியை மறித்து டிராக்டரை நிறுத்தியுள்ளார். இதில் நேற்று மாலை, அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது முருகன், சிவரஞ்சனி ஆகியோர், கத்தியால் மாரிமுத்து, ருக்மணியை சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த தம்பதியர், சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். கிராம மக்கள் புகார்படி, சாமல்பட்டி போலீசார், தம்பதி உடல்களை கைப்பற்றி, முருகன், சிவரஞ்சனியை தேடுகின்றனர்.