/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தொழில் போட்டியால் மாமனை வெட்டிய மைத்துனர் கைது
/
தொழில் போட்டியால் மாமனை வெட்டிய மைத்துனர் கைது
ADDED : ஜூலை 18, 2025 01:19 AM
தாரமங்கலம்,
தாரமங்கலத்தை சேர்ந்தவர் ரங்கன், 56. இவரது மைத்துனர் ஈஸ்வரனுடன் சேர்ந்து, தறி நுால் பாவு கடை நடத்தி வந்தனர். அதில் பணம் கொடுக்கல் வாங்கலில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தனித்தனியாக தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த, 15ல், கருணாநிதி சிலை பகுதியில் ரங்கன் நின்றிருந்தார். அப்போது அங்கு ஈஸ்வரன், அவரது நண்பர் சேட்டு ஆகியோர் பைக்கில் வந்தனர்.
பின், கத்தியை சேட்டு எடுத்து கொடுத்தவுடன் அதை வாங்கிய ஈஸ்வரன், ரங்கனை முதுகில் குத்தி, கண் புருவத்தில் இருந்து காது வரை வெட்டியுள்ளார். ரங்கனை மக்கள் மீட்டு சேலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். ரங்கன் புகார்படி தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவான சேட்டு, ஈஸ்வரனை நேற்று கைது செய்தனர்.