/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சொத்து பிரச்னையில் கொடூரம்; தம்பியை கொலை செய்த அண்ணன், அண்ணி கைது
/
சொத்து பிரச்னையில் கொடூரம்; தம்பியை கொலை செய்த அண்ணன், அண்ணி கைது
சொத்து பிரச்னையில் கொடூரம்; தம்பியை கொலை செய்த அண்ணன், அண்ணி கைது
சொத்து பிரச்னையில் கொடூரம்; தம்பியை கொலை செய்த அண்ணன், அண்ணி கைது
ADDED : டிச 18, 2024 07:13 AM
வீரபாண்டி: சொத்து பிரச்னையில் தேங்காய் உரிக்கும் இரும்பு கம்பியால், தம்பியை குத்திக்கொன்ற அண்ணன், அண்ணியை, போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே இனாம் பைரோஜி, மாமரத்துக்கொட்டாயை சேர்ந்தவர் சிவஞானம், 54. இவரது தம்பி செல்வராஜ், 45. இருவரும் தேங்காய் மட்டை உரிக்கும் தொழில் செய்தனர். இவர்கள் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு பூர்வீக நிலம் உள்ளது. அதை பிரித்துக்கொள்வதில் பிரச்னை இருந்தது.
கடந்த வாரம் செல்வராஜ், வீட்டுமனை அருகே காலி இடத்தில் கொட்டகை போட முயன்றார். அதில் சிவஞானம் - செல்வராஜ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் காலை, செல்வராஜ், அவரது மனைவி ரேவதி, சிவஞானம், அவரது மனைவி சுதா இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இரவு வரை நீடித்த நிலையில் சுதா, தேங்காய் உரிக்கும் இரும்பு கம்பியால், ரேவதியை தாக்கியுள்ளார்.தடுக்க முயன்ற செல்வராஜை, சிவஞானம் தள்ளிவிட்டார். தொடர்ந்து அவர், சுதா கையில் இருந்த கம்பியை பிடுங்கி, செல்வராஜ் மார்பில் குத்தினார். அதில் அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். காயம் அடைந்த ரேவதியை, உறவினர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ரேவதி புகார்படி, ஆட்டையாம்பட்டி போலீசார், தம்பியை கொன்ற அண்ணன் சிவஞானம், அண்ணி சுதாவை கைது செய்தனர்.