/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'நாடு முழுதும் 5ஜி வழங்கினால் பி.எஸ்.என்.எல்.,க்கு நிரந்தர லாபம்'
/
'நாடு முழுதும் 5ஜி வழங்கினால் பி.எஸ்.என்.எல்.,க்கு நிரந்தர லாபம்'
'நாடு முழுதும் 5ஜி வழங்கினால் பி.எஸ்.என்.எல்.,க்கு நிரந்தர லாபம்'
'நாடு முழுதும் 5ஜி வழங்கினால் பி.எஸ்.என்.எல்.,க்கு நிரந்தர லாபம்'
ADDED : பிப் 16, 2025 02:57 AM
சேலம்: தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளன சேலம் மாவட்ட செயலர் பாலகுமார் கூறியதாவது:
பி.எஸ்.என்.எல்., நிறுவனம், 17 ஆண்டுக்கு பின், அதாவது, 2007க்கு அடுத்து, 2024ல், மூன்றாவது காலாண்டில், 262 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியிருந்தாலும், அது, 2024 - 25 நிதி-யாண்டு லாபமாக கருத இயலாது. அதற்கு, 2025 ஏப்ரல் வரை காத்திருக்க வேண்டும்.
புதிதாக, 1.3 கோடி வாடிக்கையாளர்களை இணைத்தது, '4ஜி' தொழில்நுட்ப சேவையை நாடு முழுதும் பரவலாக்கியது, 2020ல், 87,000 பேர் விருப்ப ஓய்வில் சென்றது, ஆளெடுக்க தடை நீட்டித்து, செலவுகளை கணிசமாக குறைத்தது, 2017 முதல், ஊதிய மாற்றம் செய்யாதது ஆகியவை மூலம் லாபம் கிடைத்துள்ளது.
இந்த லாபத்தை தக்கவைக்க, தனியார் டெலிகாம் நிறுவனங்க-ளுடன், சம அளவில் தொழில் போட்டியில் ஈடுபட, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.
குறிப்பாக, '5ஜி' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, நாடு முழுதும் மொபைல் சேவை வழங்க வேண்டும். கட்டமைப்பை நவீனப்படுத்தவும், தரம் உயர்த்தவும் தேவையான நிதியை ஒதுக்-கினால், டெலிகாம் சந்தையில், 10 சதவீதம் என்ற நிலை மாறி, 25 சதவீதமாக உயர்த்தி காட்டி, நிரந்தர லாபத்தை நோக்கி செல்-லலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

