/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கட்டட ஓனர் - வாடகைதாரர் பரஸ்பர புகாரால் வழக்கு
/
கட்டட ஓனர் - வாடகைதாரர் பரஸ்பர புகாரால் வழக்கு
ADDED : ஜூலை 12, 2024 07:23 AM
சேலம்: சேலம், மரவனேரியை சேர்ந்தவர் கிரண்குமார், 48.
இவருக்கு சொந்தமாக, புது பஸ் ஸ்டாண்ட் அருகே மெய்யனுாரில் கட்டடம் உள்ளது. அங்கு அதே பகுதியை சேர்ந்த பழனிராஜாவின் மனைவி பத்மாவதி, 45, என்பவர், கணினி விற்பனை, சர்வீஸ் கடையை நடத்துகிறார்.பத்மாவதி, பள்ளப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரில், 'கடையில் இருந்த, 50,000 ரூபாய், மடிக்கணினி, கணினி உதிரிபாகங்கள் என, 6.41 லட்சம் ரூபாய் மதிப்பில் பொருட்களை, கிரண்குமார் எடுத்துச்சென்று விட்டார்' என கூறியிருந்தார்.அதேபோல் கிரண்குமார் புகாரில், 'பழனிராஜா, பத்மாவதி, கடையின் வாடகை தராமல் இருந்தனர். இதுகுறித்து கேட்டபோது தகாத வார்த்தையில் பேசி, கொலை மிரட்டல் விடுத்தனர்' என கூறியிருந்தார். இரு தரப்பு புகார்படி, வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.