/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
எருது விடும் விழா; ஊர்வலமாக வந்த காளைகள்
/
எருது விடும் விழா; ஊர்வலமாக வந்த காளைகள்
ADDED : ஜூலை 17, 2025 01:51 AM
தாரமங்கலம்,
தாரமங்கலம் அருகே, பெரியாம்பட்டியில் இன்று ஆடி பிறப்பையொட்டி, எருது விடும் விழா நடப்பது வழக்கம். அதற்கு சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான காளைகளை, வீரர்கள் நேற்று காலை முதல் தாரமங்கலம் வாரச்சந்தைக்கு கொண்டு வந்தனர். மாலை 5:00 மணிக்கு வாரச்சந்தையில் இருந்து, 100க்கும் மேற்பட்ட காளைகள் ஊர்வலமாக, பெரியாம்பட்டி, செம்பு மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. ஏராளமான காளைகள் ஒன்றாக அழைத்து வரப்பட்டதை மக்கள் பார்த்து ரசித்தனர்.
இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் தாரமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவில் வளாகத்தில் எருதுவிடும் விழா இன்று மதியம் நடக்கிறது.