/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் அருகே அனுமதியின்றி எருதாட்டம்: தடியடி நடத்தி விரட்டியடித்த போலீசார்
/
சேலம் அருகே அனுமதியின்றி எருதாட்டம்: தடியடி நடத்தி விரட்டியடித்த போலீசார்
சேலம் அருகே அனுமதியின்றி எருதாட்டம்: தடியடி நடத்தி விரட்டியடித்த போலீசார்
சேலம் அருகே அனுமதியின்றி எருதாட்டம்: தடியடி நடத்தி விரட்டியடித்த போலீசார்
ADDED : ஜன 18, 2024 02:02 PM
வாழப்பாடி : அனுமதி இன்றி எருதாட்டம் நடத்தியதால் தடியடி நடத்தி போலீசார் விரட்டியடித்தனர். இதில் இன்ஸ்பெக்டர் உள்பட, 3 போலீசார் காயம் அடைந்தனர். 50க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி சேலம் மாவட்டம் காரிப்பட்டி, பெரியகவுண்டாபுரத்தில் மந்தைமேடு அருகே மாரியம்மன் கோவில் திடலில் எருதாட்டம் நடத்துவது வழக்கம். கடந்த, 2 ஆண்டுகளாக அனுமதி இன்றி எருதாட்டம் நடத்தினர். அதேபோல் இந்த ஆண்டும் நேற்று காலை, 10:00 மணிக்கு எருதாட்டம் நடத்த ஏற்பாடு செய்ததனர்.
சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள, 100க்கும் மேற்பட்ட காளைகளுடன், 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள், அப்பகுதியினர் குவிந்தனர். காரிப்பட்டி இன்ஸ்பெக்டர் நவாஸ் தலைமையில் போலீசார், வாழப்பாடி தாசில்தார் ஜெயந்தி தலைமையில் வருவாய்த்துறையினர் முன்கூட்டியே வந்து அனுமதியின்றி எருதாட்டம்நடத்த முயன்றவர்களை தடுத்து நிறுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் மதியம், 2:00 மணிக்கு, 50க்கும் மேற்பட்ட காளைகளை, இளைஞர்கள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விட்டனர். இதை தடுக்க முயன்றபோது ஒரு காளை ஓடிவர, தப்ப முயன்று எகிறி குதித்த இன்ஸ்பெக்டர் நவாஸ் காயம் அடைந்தார். அதேபோல் எஸ்.ஐ., ஏட்டு மீது மாடு லேசாக மோதியதில், மொத்தம், 3 போலீசார் காயம் அடைந்தனர். தவிர காளை மாடு ஏறி, தாசில்தாரின் கார் சேதம் அடைந்தது.
இதையடுத்து அதிகளவில் போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தடியடி நடத்தி இளைஞர்களை விரட்டி அடித்தனர். அதில், 10 பேரை காரிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். 50க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். இச்சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவியது.