/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நெய்காரப்பட்டியில் ஆடி திருவிழா எருதாட்டத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்

ADDED : ஜூலை 18, 2025 01:21 AM
சேலம், சேலம், நெய்காரப்பட்டி மூங்கில்குத்து முனியப்பன் கோவில் ஆடித்திருவிழாவையொட்டி, நேற்று நடந்த பாரம்பரிய எருதாட்டத்தில், 90க்கும் மேற்பட்ட காளைகளுடன் இளைஞர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஆடி மாதப்பிறப்பான நேற்று வியாழக்கிழமை இணைந்து வந்ததால், முனியப்பனுக்கு பெரிய பூஜை நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து ஆடு, கோழிகளை பலியிட்டு பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்தனர். மதியம். 2:00 மணிக்கு மேல் பல்வேறு ஊர்களில் இருந்து அழைத்து வரப்பட்ட, 90க்கும் மேற்பட்ட காளைகளை நெய்காரப்பட்டி மாரியம்மன் கோவில் மைதானத்துக்கு அழைத்து வந்தனர். மக்களை பார்த்து சீறிப்பாய்ந்த காளைகளை, கோர்வை குழுக்களை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், காளைகளின் இருபுறமும் கட்டப்பட்டிருந்த நீண்ட கயிறுகளை பிடித்து இழுத்து கட்டுப்படுத்தினர். நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.