/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பீரோ பட்டறை உரிமையாளர் கொலை; மேலும் ஒருவர் கைது
/
பீரோ பட்டறை உரிமையாளர் கொலை; மேலும் ஒருவர் கைது
ADDED : நவ 12, 2024 01:37 AM
பீரோ பட்டறை உரிமையாளர்
கொலை; மேலும் ஒருவர் கைது
வாழப்பாடி, நவ. 12-
அயோத்தியாப்பட்டணம் அடுத்த வெள்ளியம்பட்டியை சேர்ந்தவர் பட்டறை சரவணன் (எ) சரவணன், 40. இவர் கடந்த, 8ல், வலசையூர் பகுதியிலிருந்து அயோத்தியாப்பட்டணம் நோக்கி, அரூர் நெடுஞ்சாலையில் குள்ளம்பட்டி பனங்காடு அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் மற்றொரு காரில் வந்த கும்பலால் நடுரோட்டில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சேலம் சரக டி.ஐ.ஜி., உமா தலைமையில், ஆறு தனிப்படை அமைத்து போலீசார் தேடினர்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி காட்டூர் ஆனந்தனின் ஆதரவாளர்கள் சரவணனை கொன்றது தெரிந்தது. இதில், பிரபல ரவுடி ஆனந்தனின் மனைவி சத்யா, அவரது மைத்துனர் வக்கீல் கணேசன் உள்ளிட்ட, ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். மற்றொரு மைத்துனர் கார்த்தி உள்ளிட்ட 10 பேர் சரணடைந்தனர். இந்த வழக்கில், சரவணன் கொலைக்கு உதவியதாக, குள்ளம்பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி பிரபு, 37, என்பவரை நேற்று காரிப்பட்டி போலீசார் கைது செய்து, ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.