/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலத்தில் நள்ளிரவில் வீடு புகுந்த கொள்ளையர்கள் காரில் தப்பினர்
/
சேலத்தில் நள்ளிரவில் வீடு புகுந்த கொள்ளையர்கள் காரில் தப்பினர்
சேலத்தில் நள்ளிரவில் வீடு புகுந்த கொள்ளையர்கள் காரில் தப்பினர்
சேலத்தில் நள்ளிரவில் வீடு புகுந்த கொள்ளையர்கள் காரில் தப்பினர்
ADDED : ஜன 30, 2024 03:16 PM
சேலம் : சேலம், கன்னங்குறிச்சியில் வீடு புகுந்து கொள்ளை அடிக்க முயன்ற கும்பலை, போலீசார் துரத்திய நிலையில் காரில் அவர்கள் தப்பினர்.சேலம், கன்னங்குறிச்சி கேசவநகரை சேர்ந்தவர் பியூலா தனபால், 42.
இவர் கடந்த, 25 வீட்டை பூட்டி விட்டு, திருச்சியில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்றார். நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவுகள் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, இரு மர்ம நபர்கள் பியூலா தனபாலை தள்ளி விட்டு ஓடினர்.அவர் கூச்சலிடவே, கொள்ளையர்கள் வீட்டின் முன் தயார் நிலையில் நிறுத்தி இருந்த டாட்டா இண்டிகா காரில் தப்பினர். அப்பகுதி மக்கள், கன்னங்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சேலம், நாமக்கல், தர்மபுரி, கள்ளக்குறிச்சி போலீசார் உஷார்படுத்தப்பட்டு வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. அதே நேரத்தில் கொள்ளையர்கள், சீலநாயக்கன்பட்டி பைபாஸ் வந்து நாமக்கல் நோக்கி பறந்தனர். அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் கொள்ளையர்களின் காரை துரத்தினர்.ஆனால், மல்லுார் உட்பட நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் போலீஸ் இல்லாததால், கொள்ளையர்கள் மின்னல் வேகத்தில் பறந்தனர். சேலம் மாநகர போலீசார் தொடர்ந்து துரத்தி சென்ற நிலையில், புதுச்சத்திரம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட களங்காணி அருகே சென்ற போது கொள்ளையர்களின் கார் பெட்ரோல் இன்றி நின்றது.காரில் இருந்த கொள்ளையர்கள் தப்பினர். பின் தொடர்ந்து சென்ற, சேலம் மாநகர போலீசார் காரை பறிமுதல் செய்து, சோதனை நடத்தியதில், அதில் ஒன்றும் சிக்கவில்லை. காரின் எண்களை வைத்து, கொள்ளையர்களை அடையாளம் காண விசாரணை நடத்தி வருகின்றனர்.