பஸ் டிரைவர், கண்டக்டருக்கு 'பளார்' எஸ்.ஐ.,யை கண்டித்து சாலை மறியல்
பஸ் டிரைவர், கண்டக்டருக்கு 'பளார்' எஸ்.ஐ.,யை கண்டித்து சாலை மறியல்
ADDED : செப் 16, 2026 06:30 AM
ஆத்துார்:ஆத்துார்
புது பஸ் ஸ்டாண்டில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு அரசு, தனியார்
பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அதன்படி நேற்று இரவு, 7:40 மணிக்கு,
பெரம்பலுார் தடத்தில் வேறு ஒரு பஸ்சை இயக்குவதாக, 'ஸ்ரீனிவாசா' எனும்
தனியார் பஸ் டிரைவர் அரவிந்தன், கண்டக்டர் சதீஷ்குமார் ஆகியோர், அரசு
பஸ் டிரைவர் முருகேசனிடம் கேட்டுள்ளனர்.இதில்
அரசு, தனியார் பஸ் டிரைவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு
வந்த, ஆத்துார் டவுன் எஸ்.ஐ., சிவசக்தி, தனியார் பஸ் டிரைவர்,
கண்டக்டரை, 'பளார்' என அறைந்து தாக்கியதோடு, அவர்களை
இழுத்துச்சென்று, பஸ் ஸ்டாண்டில் உள்ள புறக்காவல் நிலையத்தில்
விட்டுள்ளார். இதை
அறிந்த தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்கள், தனியார் பஸ்களை
நிறுத்திவிட்டு, இரவு, 8:30 மணிக்கு, அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த போலீசார் பேச்சு நடத்தினர். அப்போது, 'டிரைவர்,
கண்டக்டரை தாக்கிய எஸ்.ஐ., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை
எனில், நாளை(இன்று) தனியார் பஸ்களை இயக்கமாட்டோம்'
என கூறிவிட்டு, 9:00 மணிக்கு கலைந்தனர். காயம் அடைந்த டிரைவர்
அரவிந்தன், 45, ஆத்துார் அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.இதுகுறித்து,
எஸ்.ஐ., சிவசக்தி கூறுகையில், ''அரசு பஸ்சின் முன் பக்க டயர் பகுதியில்
அமர்ந்து, டிரைவர், கண்டக்டர் போராட்டம் நடத்தியதால், அவர்களை மீட்க
அடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அரசு பஸ் டிரைவரிடம் தகராறு
செய்தது தொடர்பாக விசாரணை நடக்கிறது,'' என்றார்.அரசு
போக்குவரத்து கிளை மேலாளர் வெங்கடேசன் கூறுகையில், ''கும்பகோணம்
கோட்ட பஸ் பழுதால், மற்றொரு பஸ் இயக்கப்பட்டது. அந்த பஸ்சை இயக்க
விடாமல் தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர் தகராறு செய்ததோடு, அரசு
பஸ்சின் முன், தனியார் பஸ்சை நிறுத்தி வாக்குவாதம் செய்தனர். அதை
கேட்டபோது, என் மீது பஸ்சை விடுவதுபோன்று வந்தனர். இதுதொடர்பாக
அரசு பஸ் டிரைவர், போலீசில் புகார் அளித்துள்ளார்,'' என்றார்.
