/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வீடுகளில் எதுவும் சிக்காத நிலையில் சாவியுடன் நிறுத்திய மொபட் திருட்டு வீடுகளில் எதுவும் சிக்காத நிலையில் சாவியுடன் நிறுத்திய மொபட் திருட்டு
வீடுகளில் எதுவும் சிக்காத நிலையில் சாவியுடன் நிறுத்திய மொபட் திருட்டு வீடுகளில் எதுவும் சிக்காத நிலையில் சாவியுடன் நிறுத்திய மொபட் திருட்டு
வீடுகளில் எதுவும் சிக்காத நிலையில் சாவியுடன் நிறுத்திய மொபட் திருட்டு வீடுகளில் எதுவும் சிக்காத நிலையில் சாவியுடன் நிறுத்திய மொபட் திருட்டு
ADDED : செப் 16, 2026 06:30 AM
அ நிறம் | அளவு
சேலம்:சேலம், அன்னதானப்பட்டி அழகு நகரை சேர்ந்தவர் பூமாலை, 52. இவர் வீடு முன் நிறுத்தப்பட்டிருந்த, 'அக்சஸ்' மொபட்டை, நேற்று காலை காணவில்லை.
அதிர்ச்சியடைந்த அவர், வீட்டில் இருந்த, 'சிசிடிவி' கேமராவை பார்த்தபோது, மர்ம நபர் வீட்டின் சுற்றுச்சுவர் மீது ஏறி குதிப்பதும், பின் மொபட்டை திருடிச்சென்றதும் பதிவாகி இருந்தது. அவர் புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
போலீசார் கூறுகையில், 'நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் கையுறை அணிந்துகொண்டு, அப்பகுதியில், 5 வீடுகளின் பூட்டை உடைத்து திருட முயன்றார்.
எதுவும் சிக்காத நிலையில், வெளியே சாவியுடன் நிறுத்தப்பட்டிருந்த மொபட்டை திருடிச்சென்றார். அவரை தேடி வருகிறோம்' என்றனர்.
