ADDED : செப் 25, 2026 05:39 AM

ஆத்துார்; ஆத்துார் புது பஸ் ஸ்டாண்டில், கடந்த, 15ல், அரசு, தனியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் இடையே, 'டைமிங்' பிரச்னையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அரசு பஸ் முன், போராட்-டத்தில் ஈடுபட்ட தனியார் பஸ் டிரைவர், கண்டக்-டரை, ஆத்துார் டவுன் எஸ்.ஐ., சிவசக்தி, 'பளார்' என அறைந்து, அங்குள்ள புறக்காவல் நிலையத்துக்கு இழுத்துச்சென்றார். அவரை கண்-டித்து, தனியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக ஆத்துார் டி.எஸ்.பி., சத்யராஜ் விசாரித்து அறிக்கை வழங்கினார். இதையடுத்து, எஸ்.ஐ., சிவசக்தியை, தலைவாசல் ஸ்டேஷ-னுக்கு இடமாற்றி, எஸ்.பி., குத்தாலிங்கம் நேற்று உத்தரவிட்டார்.அதேபோல் எஸ்.ஐ.,க்கள் இடைப்பாடி ஸ்ரீராமன் கருமலைக்கூடல்; ஆத்துார் ஊரகம் ஜெயசூர்யா தம்மம்பட்டி; கெங்கவல்லி கணேஷ்குமார் ஓமலுார்; ஏத்தாப்பூர் ஐயப்பன் ஆத்துார் டவுன்; ஜலகண்டாபுரம் ரவி தாரமங்கலம்; தலைவாசல் மங்கையற்கரசன் இடைப்பாடி; சேலம் ஹரிகி-ருஷ்ணன் ஏத்தாப்பூர்; ஜலகண்டாபுரம் சேகர் மேச்சேரி; ஓமலுார் மாரியப்பன் ஜலகண்டாபுரம்; கருமந்துறை சிவாஜி குற்றப்பிரிவு - 2; தம்மம்-பட்டி வெங்கடாஜலம் தீவட்டிப்பட்டி; குற்றப்பிரிவு 1 தாமோதரன் ஆத்துார் ஊரகம்; மல்லுார் கோபால் நங்கவள்ளி; கொங்கணாபுரம் கனகராஜ் ஓமலுார் என, 15 பேரை இடமாற்றி, எஸ்.பி., உத்தரவிட்-டுள்ளார்.
