/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மலைக்கிராமத்துக்கு பஸ் வசதி தொடக்கம்
/
மலைக்கிராமத்துக்கு பஸ் வசதி தொடக்கம்
ADDED : அக் 09, 2024 06:38 AM
ஏற்காடு: ஏற்காட்டில் இருந்து, 7 கி.மீ.,ல் தலைச்சோலை மலைக்கிராமம் உள்ளது. அங்கு, 20 ஆண்டுகளுக்கு முன் வரை, அரசு பஸ் வசதி இருந்து பின் நிறுத்தப்பட்டது.
சில ஆண்டாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஏற்காடு தொகுதி, எம்.எல்.ஏ., சித்ராவும், பஸ் வசதி செய்து தர, சேலம் கலெக்டர் பிருந்தாதேவியிடம் மனு கொடுத்திருந்தார். இந்நிலையில் நேற்று காலை, 8:10 மணிக்கு ஏற்காடு பஸ் ஸ்டாண்டில் இருந்து தலைச்சோலை கிராமத்துக்கு அரசு பஸ் போக்குவரத்து சேவை தொடங்கியது. தலைச்சோலைக்கு சென்றதும், அங்கு காத்திருந்த கிராம மக்கள், ஆரத்தி எடுத்து பஸ்சை வரவேற்றனர்.
அதேபோல் குண்டூர் வரை இருந்த அரசு பஸ் சேவையை தெப்பக்காடு வரை நீட்டிக்க கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி நேற்று முதல், தெப்பக்காடு வரை அரசு பஸ் சேவை தொடங்கியது.