/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஸ்டாப்பில் நிற்காத பஸ் சிறைபிடிப்பு
/
ஸ்டாப்பில் நிற்காத பஸ் சிறைபிடிப்பு
ADDED : ஆக 20, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார், காடையாம்பட்டி, பூசாரிப்பட்டியில் நேற்று முன்தினம் இரவு, சேலத்தில் இருந்து தர்மபுரி செல்லும் தனியார் பஸ், பூசாரிப்பட்டி ஸ்டாப்பில் நிற்காமல் சென்றது.
இதனால் அப்பகுதி மக்கள், தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி வந்த அதே பஸ்சை, பூசாரிப்பட்டியில் இரவு, 9:30 மணிக்கு வழிமறித்து நிறுத்தினர். இதை அறிந்து, தீவட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சு நடத்தினர். அப்போது இனி நிறுத்திச்செல்வதாக, டிரைவர் கூறியதால், பஸ்சை விடுவித்தனர். இச்சம்பவத்தால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.