ADDED : ஆக 29, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி, சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து சீலநாயக்கன்பட்டி, மல்லுார் வழியே நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்துக்கு அரசு, தனியார் டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ்கள், பனமரத்துப்பட்டி பிரிவு மேம்பாலத்தின் கீழ் உள்ள சர்வீஸ் சாலையில் வருவதில்லை. மேம்பாலம் வழியே மல்லுார், ராசிபுரம் செல்கின்றன.
இதனால் பாலத்தின் கீழ் சர்வீஸ் சாலையில் பஸ்சுக்கு காத்திருக்கும் மல்லுார், ராசிபுரம் செல்ல வேண்டிய பயணியர் ஏமாற்றம் அடைகின்றனர். தனியார் பஸ்கள், பாலத்தின் கீழ் சர்வீஸ் சாலையில் இயக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

