/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பைபாஸில் செல்லும் பஸ்கள் மல்லுார் மக்கள் கடும் அவதி
/
பைபாஸில் செல்லும் பஸ்கள் மல்லுார் மக்கள் கடும் அவதி
பைபாஸில் செல்லும் பஸ்கள் மல்லுார் மக்கள் கடும் அவதி
பைபாஸில் செல்லும் பஸ்கள் மல்லுார் மக்கள் கடும் அவதி
ADDED : ஜன 06, 2025 03:08 AM
பனமரத்துப்பட்டி: சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலை, மல்லுார் ஊருக்கு வெளியே செல்கிறது. அங்கு மல்லுார் பிரிவில் பாலம் கட்டுமானப்பணிக்கு பிரதான சாலை மூடப்பட்டது. நாமக்கல், கரூர், திருச்சி பகுதி-களில் இருந்து வரும் வாகனங்கள், மல்லுார் டவுன் வழியே சேலம் செல்கின்றன. ஆனால் சேலத்தில் இருந்து ராசிபுரம், நாமக்கல், கரூர், திருச்சி செல்லும் பஸ்கள், மல்லுார் ஊருக்குள் செல்லாமல், பைபாஸில் உள்ள சர்வீஸ் சாலை வழியே நேராக செல்கின்றன.
சேலம் - மல்லுார் மட்டும் இயக்கப்படும் ஓரிரு டவுன் பஸ்கள், நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள பைபாஸ் சென்று, மல்லுார் டவுனுக்கு திரும்பி வந்து சேலம் செல்கின்றன. சேலம் -ராசிபுரம், சேலம் - நாமக்கல், சேலம் - கரூர், திருச்சி வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்கள், மல்லுார் ஊருக்குள் செல்லாமல், பைபாஸ் சர்வீஸ் சாலையில் நேராக செல்கின்றன.இதனால் சேலத்தில் இருந்து மல்லுார் வரும் பயணியர் சிரமத்-துக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக இரவில் வேலை முடிந்து வீடு திரும்பும் மல்லுார் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் அவதிப்படுகின்றனர். சேலத்தில் இருந்து வரும் பஸ்களை, மல்லுார் வழியே இயக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர்.

