/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'வாங்கும் மனுக்களுக்கு தீர்வு காண வேண்டும்'
/
'வாங்கும் மனுக்களுக்கு தீர்வு காண வேண்டும்'
ADDED : பிப் 08, 2025 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே நாகியம்பட்டி, உலிபுரம், கொண்டையம்-பள்ளி கிராமங்களில், அ.தி.மு.க., சார்பில், ஓட்டுச்சாவடி பாக கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கெங்க-வல்லி எம்.எல்.ஏ., நல்லதம்பி தலைமை வகித்தார்.
அதில் சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசிய-தாவது:தி.மு.க., ஆட்சிக்கு வரும் முன், பெட்டி வைத்து வாங்கப்பட்ட மனுக்கள் எங்கே போனது என
தெரியவில்லை. தற்போது வாங்கும் மனுக்களாவது தீர்வு காணவேண்டும். கெங்கவல்லி
தொகுதியில், 30,000 ஓட்டுகள் வித்தியாசத்தில், அ.தி.மு.க., தொடர்ந்து வெற்றி பெற, கட்சியினர்
தேர்தல் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.