ADDED : நவ 29, 2026 01:21 AM
அ நிறம் | அளவு
ஓமலுார்: காடையாம்பட்டி, பெரிய வடகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் குரங்குகள் அட்டகாசம் செய்து வந்தன.
இதுகுறித்து ஆசிரியர்கள் புகார் அளித்தும், வனத்துறையினர் பணம் கேட்பதாக புகார் எழுந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, டேனிஷ்பேட்டை வனத்துறையினர், பள்ளி வளாகத்தில் ஒரு இரும்பு கூண்டு வைத்து, குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
