/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிறுத்தை தாக்கிய கன்றுக்குட்டி பலி
/
சிறுத்தை தாக்கிய கன்றுக்குட்டி பலி
ADDED : அக் 03, 2024 06:42 AM
ஆத்துார் : கெங்கவல்லி அருகே பச்சமலை ஊராட்சி, கீழ்பாலத்தாங்கரையை சேர்ந்த விவசாயி பிச்சமுத்து, 55. இவர் வீடு அருகே உள்ள பட்டியில் ஆடு, மாடுகளை அடைத்து வைத்திருந்தார். சில நாட்களுக்கு முன் பட்டியில் இருந்த, 4 கன்று குட்டிகள், ஒரு பசு மாட்டை மர்ம விலங்கு அடித்துக்கொன்றது.
நேற்று முன்தினம் வனப்பகுதியில் மாடுகள் மேய்ந்தபோது ஒரு கன்றுக்குட்டியின் கழுத்தை, சிறுத்தை கடித்தது. பிச்சமுத்து அவரது மகன்கள் விரட்டியதால் கன்றுக்குட்டியை போட்டுச்சென்றது. காயமடைந்த கன்றுக்குட்டி மீது இருந்த கீறல், காலடி தடம் குறித்து ஆய்வு செய்த பின் சிறுத்தை என்பதை வனத்துறையினர் உறுதிப்படுத்தினர். காயமடைந்த கன்றுக்குட்டியை மீட்ட நிலையில், நேற்று உயிரிழந்தது. தொடர்ந்து வனத்துறையினர், நீரோடை, புதர் பகுதிகளில் ஆய்வு செய்து நவீன கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர்.வனத்துறையினர் கூறுகையில், 'சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க, அரசுக்கு தபால் அனுப்பப்பட்டுள்ளது. கூண்டும் தயாராக உள்ளது. சிறுத்தையை பிடிக்க, கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது' என்றனர்.

