ADDED : டிச 07, 2024 07:04 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி வட்டார வேளாண் துறை, உணவு மற்றும் ஊட்-டச்சத்து பாதுகாப்பு இயக்கம் திட்டத்தில், சோளம் குறித்து விவ-சாயிகள், மக்களுக்கு செயல் விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
இதுகுறித்து பனமரத்துப்பட்டி வட்டார வேளாண் உதவி இயக்-குனர் சாகுல் அமீத் அறிக்கை:மத்திய, மாநில அரசுகள், ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானிய சோளம் பயிரிட விவசாயிகளை ஊக்குவிக்க, மானிய திட்டங்கள்
அறிவித்துள்ளன. சோள விதை எஸ்.பி.வி., 2217 ரகம், 10 கிலோ, உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ
பாக்டீரியா, உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளான சூடோமோனஸ், மண் வளத்துக்கு சிறுதானிய நுண்ணுாட்டம்,
இயற்கை உரமான ஆர்-கானிக் மெனியூர் ஆகிய இடுபொருட்கள் மானியத்தில் வழங்கப்-படும். மேலும் வீரிய சோளம்
மானியத்தில் வழங்கப்படுகிறது. இது, 120-, 125 நாள் வயதுடையது. ஒரு ஹெக்டேருக்கு, 3,000 முதல், 3,500 கிலோ
மகசூல் கிடைக்கும்.சோளத்தில் நார் சத்து, புரதம், வைட்டமின் சி, தியாமின், போலிக் அமிலம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ்
போன்ற சத்-துகள் உள்ளன. நார்ச்சத்து செரிமானத்துக்கு உதவுகிறது. குடல், வயிறு புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்க
உதவுகிறது.சோளம் இயற்கையாகவே குளுடின்(பசையம்) இல்லாதது. நீரி-ழிவு நோய் உள்ளவர்கள், கோதுமைக்கு மாற்றாக
சோளத்தை சாப்பிடலாம். சோளம் பயிரிட விரும்பும் விவசாயிகள், பனமரத்-துப்பட்டி வட்டார வேளாண் விரிவாக்க
மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.