/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முன்னாள் படை வீரர்கள் சட்ட தன்னார்வலராக அழைப்பு
/
முன்னாள் படை வீரர்கள் சட்ட தன்னார்வலராக அழைப்பு
ADDED : ஜூலை 03, 2025 01:32 AM
சேலம், சேலம் மாவட்ட சட்டப்பணி ஆணை குழுவில், சட்ட தன்னார்வலர்களாக பணிபுரிய, முன்னாள் ராணுவத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி அறிக்கை:
படைவீரர்கள், முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தோர் நலனுக்கு, தேசிய சட்டப்பணி ஆணைக்குழு, பிரத்யேக திட்டத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மாவட்ட சட்டப்பணி ஆணை குழுவுடன் இணைந்து, சட்ட விழிப்புணர்வு, சட்ட உதவி செய்வதற்கு, சட்ட தன்னார்வலர்களாக பணிபுரிய, முன்னாள் படை வீரர்களை அழைக்கிறோம். விரும்புவோர், அஸ்தம்பட்டி நீதிமன்ற வளாகத்தில் உள்ள சேலம் மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழுவையோ அல்லது 0427 - 2900011 என்ற எண் அல்லது அருகே உள்ள தாலுகா நீதிமன்றங்களில் உள்ள சட்ட உதவி மையங்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.