/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஹேண்ட்பேக்' தயாரிக்க இலவச பயிற்சிக்கு அழைப்பு
/
ஹேண்ட்பேக்' தயாரிக்க இலவச பயிற்சிக்கு அழைப்பு
ADDED : நவ 16, 2024 01:33 AM
சேலம், நவ. 16-
வாழை மட்டையில் இருந்து, 'ஹேண்ட்பேக்' உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்க, ஒரு மாத இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்ட அலுவலர் ஜெய்சங்கர் அறிக்கை:
தேசிய தொழில் முனைவோர் தினத்தை முன்னிட்டு, மத்திய அரசின் தேசிய வள அமைப்பான, இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நவ., 19ல், சேலம், அன்னபூர்ணா பொறியியல் கல்லுாரி வளாகத்தில், 'நீங்களும் தொழில் தொடங்கலாம்' எனும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.
இதில் தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்கு, பல்வேறு லாபகர தொழில் வாய்ப்புகள், அரசு மானியங்கள் குறித்து பல்துறை நிபுணர்கள் விளக்குகின்றனர். 'அசஞ்சர்' சமூக பங்களிப்பு திட்டத்தில், சிறப்பு இலவச பயிற்சியாக, வாழை மர மட்டையில் இருந்து நார் பிரித்து எடுத்து மதிப்பு கூட்டுதல் மூலம், ஹேண்ட்பேக், பைல், சேலை உள்ளிட்ட பல பொருட்கள் தயாரிக்க, ஒரு மாதம் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை பெற்று சமர்ப்பிக்கலாம். விபரங்களுக்கு, 88258 12528 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.