/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அனைத்து வகுப்புகளுக்கு வீடியோ பாடம் தயாரிக்க நடவடிக்கை ஆர்வம் உள்ள ஆசிரியர்களுக்கு அழைப்பு
/
அனைத்து வகுப்புகளுக்கு வீடியோ பாடம் தயாரிக்க நடவடிக்கை ஆர்வம் உள்ள ஆசிரியர்களுக்கு அழைப்பு
அனைத்து வகுப்புகளுக்கு வீடியோ பாடம் தயாரிக்க நடவடிக்கை ஆர்வம் உள்ள ஆசிரியர்களுக்கு அழைப்பு
அனைத்து வகுப்புகளுக்கு வீடியோ பாடம் தயாரிக்க நடவடிக்கை ஆர்வம் உள்ள ஆசிரியர்களுக்கு அழைப்பு
ADDED : டிச 28, 2024 01:54 AM
சேலம்: சமச்சீர் பாடத்திட்டத்தில் அனைத்து பள்ளி வகுப்புகளுக்கும் வீடியோ பாடம் தயாரிக்க நடவடிக்கை எடுக்-கப்பட்டுள்ளது. அப்பணிக்கு, கற்றல் கற்பித்தலில் புது அணுகுமுறை, ஆர்வம் கொண்ட ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா சூழலுக்கு பின், கல்வி கற்பித்தலில் பல்வேறு மாற்றங்கள் உருவாகி வருகின்றன. ஆன்லைன் கற்பித்தல், வீடியோ பாடங்கள் மூலம் கற்பித்தல் என, தனியார் பள்ளிகள், பயிற்சி நிறுவனங்கள் போட்டி-போட்டு, நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றன. இதற்கேற்ப அனைவரின் கைககளிலும், 'ஸ்மார்ட் போன்', மடிக்கணினி உள்ளிட்ட வசதிகள் அதிகரித்துள்ளன. இதனால் வீடியோ மூலம் கற்றுக்-கொள்ளும் முறை அதிகரித்து வருகிறது.தற்போது சமச்சீர் பாடத்திட்டத்தில் அனைத்து பள்ளி வகுப்புகளுக்கும், பாடங்களை வீடியோவாக தயா-ரிக்க, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், நடவடிக்கை எடுத்து வருகிறது. அதில் மாண-வர்களுக்கு எளிதாக புரியும்படியும், கடினமான பாடங்களை கூட, எளிமையாக, சுவாரஸ்யமாக நடத்தக்கூடிய ஆசிரியர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மூலம் வீடியோ தயாரிக்கப்பட உள்ளது. இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அதன் உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்-பட்டுள்ளது.
இதுகுறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனரகம், கடந்த, 23ல், பள்ளி கல்வி, தொடக்க கல்வி, தனியார் பள்ளி இயக்குனரகங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
கற்றல் கற்பித்தல் மற்றும் கல்வி காணொலி உருவாக்கத்தில் ஆர்வம் கொண்ட ஆசிரியர்கள், சிக்கலான தலைப்புகளை, எளிமையாக, சுவாரஸ்யமாக, மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும்படி விளக்கும் திறன் உடையவர்கள், கற்றல் கற்பித்தலில் புதுமை, மகிழ்வான கற்றலை ஊக்குவிக்கும் ஆசிரியர்கள், புது அணுகுமு-றையை கற்றுக்கொள்ளும் ஆர்வம், அதை கற்றல் கற்பித்தலில் செயல்படுத்தும் திறன் உடைய ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம். கற்பிக்கும் திறனை விளக்கும்படி பாடம் நடத்துவதை, 2 நிமிடங்களில் எடுத்து பதி-வேற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.