/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குறுகிய கால நெல் ரகம் பரிசோதிக்க அழைப்பு
/
குறுகிய கால நெல் ரகம் பரிசோதிக்க அழைப்பு
ADDED : செப் 21, 2024 06:51 AM
சேலம்: குறுகிய கால நெல் ரகங்களை விவசாயிகள், விற்பனையாளர்கள் பரிசோதிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் விதை பரிசோதனை நிலைய வேளாண் அலு-வலர் பிருந்தா அறிக்கை:சேலம் மாவட்டத்தில் குறுகிய கால நெல் ரகங்களுக்கு அதிக தேவை உள்ளது. இந்த ரகங்களை விற்கும் விற்பனையாளர்களும், அவற்றை வாங்கும் விவசாயிகளும், விதை பகுப்பாய்வில் தேறி-யுள்ளதா என பார்த்து வாங்க, விற்க வேண்டும். நெல் விதைகளின் குறைந்தபட்ச முளைப்பு திறன் தேவை, 80 சத-வீதம், சுத்தத்தன்மை, 98 சதவீதம், பிற ரக கலப்பு அதிகபட்சம், 0.20 சதவீதம்
இருக்கலாம். இந்த மூன்று சோதனைகளை செய்ய விதை விற்பனையாளர்கள், தங்களிடம் உள்ள ஒவ்வொரு விதை குவியலில் இருந்து, 400
கிராம் விதையை எடுக்க வேண்டும்.
பின் அதை, விண்ணப்ப கடிதத்துடன், 'கலெக்டர் அலுவலக அறை எண்: 403, சேலம் - 636 001' என்ற முகவரியில் உள்ள விதை பரிசோதனை
ஆய்வகத்துக்கு நேரடியாகவோ, தபால் மூலமோ அனுப்பி வைக்கலாம். இதன்மூலம் பரிசோதனை முடி-வுகளை அறியலாம். ஒரு மாதிரி
பகுப்பாய்வு பரிசோதனைக்கு, 80 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.