/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முன்மாதிரி விருது பெற திருநங்கையருக்கு அழைப்பு
/
முன்மாதிரி விருது பெற திருநங்கையருக்கு அழைப்பு
ADDED : ஜன 07, 2024 10:33 AM
சேலம்: திருநங்கையர், சமூகத்தில் சந்திக்கும் எதிர்ப்புகளை மீறி சொந்த முயற்சியில் படித்து தனித்திறமைகளால் பல்வேறு துறைகளில் முன்னேறி வருகின்றனர்.
அத்தகைய சாதனை படைத்த திருநங்கையரை கவுரவிக்க, திருநங்கையர் தினமான ஏப்., 15ல், திருநங்கையருக்கு முன்மாதிரி விருது வழங்கப்பட உள்ளது. விருது பெறுவோருக்கு, ஒரு லட்சம் ரூபாய், சான்றிதழ் வழங்கப்படும்.
மனுதாரர், கருத்துருவை வரும் பிப்., 28க்குள் அனுப்ப வேண்டும். அதற்கான விண்ணப்பத்தை, தமிழ்நாடு அரசின் விருதுகள் இணையதளமான, https://awards.tn.gov.in பதிவேற்றம் செய்து, பூர்த்தி செய்த பின், கலெக்டர் அலுவலக முதல் தளம், அறை எண்: 126ல் உள்ள, மாவட்ட சமூகநல அலுவலகத்தில் கருத்துருவை சமர்ப்பிக்க வேண்டும்.
குறிப்பாக திருநங்கையர் அரசு உதவி பெறாமல் சுயமாக வாழ்க்கையில் முன்னேறியிருக்க வேண்டும். குறைந்தது, 5 திருநங்கையர் வாழக்கையின் முன்னேற்றத்துக்கு உதவியிருக்க வேண்டும். நலவாரியத்தில் உறுப்பினராக இருக்கக்கூடாது.
கருத்துருவில் பொருளடக்கம், சுய விபரம், இரு புகைப்படம், ஒரு பக்கத்தில் சுய விபரம், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதப்பட வேண்டும். இதற்கு முன் பெற்ற விபரம், விருதின் பெயர், யாரிடம் பெற்றது, பாராட்டிய பத்திரிகை செய்தி, சேவை செய்தமைக்கான முழு அறிக்கை, குற்ற வழக்கு இல்லையென போலீஸ் ஸ்டேஷனில் பெறப்பட்ட சான்று உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் இணைத்து வழங்க வேண்டும்.