/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வீடியோ ஒளிப்பதிவு பயிற்சி பெற அழைப்பு
/
வீடியோ ஒளிப்பதிவு பயிற்சி பெற அழைப்பு
ADDED : ஆக 27, 2025 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம் மாவட்டத்தில், 'தாட்கோ' மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சேர, ஆதிதிராவிடர், பழங்குடியினத்தை சார்ந்தவராக இருக்க
வேண்டும். ஆண்டு குடும்ப வருவாய், 3 லட்சம் ரூபாய்க்கு மிகாமலும், வயது, 18 முதல், 30க்குள்ளும் இருக்க வேண்டும். பயிற்சி காலம், 3 மாதங்கள்.
பயிற்சியை முழுமையாக நிறைவு செய்யும் இளைஞர்களுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்புக்கான வழிவகை செய்யப்படும். அதற்காக, தாட்கோ இணையதளமான, www. tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் பிருந்தாதேவி கேட்டுக்கொண்டுள்ளார்.