/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விழிப்புணர்வு பேனர் அச்சகங்களுக்கு அழைப்பு
/
விழிப்புணர்வு பேனர் அச்சகங்களுக்கு அழைப்பு
ADDED : நவ 28, 2025 01:01 AM
சேலம், சேலம் மாவட்ட நிர்வாகத்துக்கு, விழிப்புணர்வு பேனர் அச்சடித்து வழங்க, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதுகுறித்து சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:
மகளிர் திட்ட அலுவலகம், மேலாண்மை அலகு மூலம், சமுதாய அமைப்புகளுக்கு பயிற்சி, விழிப்புணர்வு பேரணி உள்ளிட்ட திட்ட செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு பேனர்கள் அச்சிடப்பட உள்ளன.
அதனால் மாவட்டத்தில் விருப்பமுள்ள அச்சகங்கள், விலைப்புள்ளிகளை நேரிலோ, தபால் மூலமோ, 'திட்ட இயக்குனர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, அறை எண்:
207, இரண்டாம் தளம், கலெக்டர் அலுவலகம், சேலம்' முகவரியில், டிச., 10 மாலை, 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு முன்னுரிமை
வழங்கப்படும்.

