/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வலி நிவாரணம், நோய் தணிப்பு சிகிச்சை பயன்பெற நோயாளிகளுக்கு அழைப்பு
/
வலி நிவாரணம், நோய் தணிப்பு சிகிச்சை பயன்பெற நோயாளிகளுக்கு அழைப்பு
வலி நிவாரணம், நோய் தணிப்பு சிகிச்சை பயன்பெற நோயாளிகளுக்கு அழைப்பு
வலி நிவாரணம், நோய் தணிப்பு சிகிச்சை பயன்பெற நோயாளிகளுக்கு அழைப்பு
ADDED : அக் 20, 2024 04:24 AM
சேலம்: சேலம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், 'வலி நிவா-ரணம் மற்றும் நோய் தணிப்பு' சிகிச்சை துறை சார்பில் விழிப்பு-ணர்வு கருத்தரங்கம் நேற்று நடந்தது. டீன் தேவி மீனாள் தலைமை வகித்தார்.
அதில் துறையின் இணை பேராசிரியர் அருணாசலம் பேசியதா-வது: தீராத வியாதிகளின் வீரியத்தை குறைத்து அந்நோயாளி-களை ஆசுவாசப்படுத்துவதே இந்த சிகிச்சை துறையின் செயல்-பாடு. குறிப்பாக புற்றுநோய், பக்கவாதத்தால் நரம்பு தொடர்பான குணப்படுத்த முடியாத நாள்-பட்ட நோய், சிறுநீரக, இருதய செயலிழப்புகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது, அதை கட்டுப்படுத்துவதற்கான சிகிச்சையும் சேர்த்து அளிக்கப்படும். அதனால் பாதிப்பு என்பது ஓரளவு குறையும்.
உலக அளவில் வலி நிவாரணம், நோய் தணிப்பு சிகிச்சைத்துறை, 40 ஆண்டாக உள்ளது. தமிழகத்தில், 'மக்களை தேடி மருத்துவ திட்டம்' பயன்பாட்டுக்கு வந்ததால், 3 ஆண்டாக இத்துறை பெரும்பாலான அரசு மருத்துவ கல்லுாரிகளில் மேம்படுத்தப்-பட்டு வருகின்றன. அதன்படி சேலம் அரசு மருத்துவக்கல்லுா-ரியில் மாதம், 500 நோயாளிகள் இச்சிகிச்சையால் பயன்பெற்று வருகின்றனர். எனினும் இதுகுறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது. அதனால் உலக நோய் தணிப்பு தினத்தையொட்டி இந்த சிகிச்சை முறையை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும்படி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜ்குமார், புற்றுநோய் கதிரி-யக்க மருத்துவர் விஜயவீரன் உள்பட பலர் பங்கேற்றனர்.