/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மலைப்பாதையில் 'டிரக்கிங்' பொதுமக்களுக்கு அழைப்பு
/
மலைப்பாதையில் 'டிரக்கிங்' பொதுமக்களுக்கு அழைப்பு
ADDED : நவ 11, 2024 07:46 AM
சேலம்: தமிழக வனத்துறை சார்பில், மலை பிரதேசங்களில், 'டிரக்கிங்' செல்ல அனுமதி தரப்பட்டுள்ளது. இதன்படி சேர்வராயன் மலைத்தொடரில், மூன்று வழித்தடங்களில் 'டிரக்கிங்' செல்லலாம்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா குண்டூர் டிரக்கிங் பாதை, 6 கி.மீ., ஒரு வழி பயணத்துக்கு, 2,799 ரூபாய் கட்டணம். அதேபோல் கொண்டப்பநாயக்கன்பட்டி, ஏற்காடு அடிவாரம் குண்டூர் டிரக்கிங் பாதை, 5 கி.மீ., ஒரு வழி பயணத்துக்கு, 1,699 ரூபாய் கட்டணம். ஏற்காடு மலையில் உள்ள நாகலுார் சன்னியாசி மலைப்பாதை, 2.5 கி.மீ., இரு வழி பயணத்துக்கு, டிரக்கிங் கட்டணம், 599 ரூபாய். இந்த, 3 தடங்களில் அனைத்து நாட்களிலும், http://www.trektamilnadu.com/page/aboutல் முன்பதிவு செய்து 'டிரக்கிங்' செல்லலாம். முன்பதிவில் எந்த நாள், நேரம், எத்தனை பேர் என்பதை தேர்வு செய்ய வேண்டும். கடந்த, 2ம் தேதி முதல் 'டிரக்கிங்' தொடங்கியுள்ளது.
டிரக்கிங் செல்வோருக்கு பேக், தொப்பி, டிசர்ட், நோட்டு, பேனா, உணவு, தண்ணீர் பாட்டில், தின்பண்டம் வழங்கப்படும். பயணியருடன் மலைக்கிராமத்தை சேர்ந்த 2 அல்லது 3 கைடுகள் செல்வர். அவர்கள் மரங்கள், பறவைகள், காடுகள் குறித்து விளக்கமளிப்பர். இவ்வாறு கூறினர்.