/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆட்டோ ஓட்டுனர் நல வாரிய உறுப்பினராக இன்று முகாம்
/
ஆட்டோ ஓட்டுனர் நல வாரிய உறுப்பினராக இன்று முகாம்
ADDED : ஜன 10, 2025 07:14 AM
சேலம்: சேலம் தொழிலாளர் உதவி கமிஷனர் சங்கீதா அறிக்கை: தொழிலாளர் உதவி கமிஷனர்(சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில், தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் சமூக பாதுகாப்பு நல வாரியம் உருவாக்கப்பட்டு, 18 வகை தொழிலாளர் நல வாரியங்கள் செயல்படுகின்றன. அதில் ஆட்டோ ஓட்டுனர் தொழிலில் ஈடுபட்டுள்ள, 18 முதல், 60 வயதுக்குட்பட்ட தொழிலாளர்கள் பதிவு செய்யலாம். இதற்கான சிறப்பு முகாம், ஜன., 10(இன்று) காலை, 10:00 முதல் மாலை, 4:00 மணி வரை, புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பூமாலை வணிக வளாகத்தில் நடக்கிறது.
நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்பவர்களுக்கு திருமணம், மகப்பேறு, 2 குழந்தைகளுக்கு கல்வி நிதியுதவி, இயற்கை மரணம், விபத்து மரண உதவித்தொகை, 60 வயது நிறைவு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இதில் பதிவு செய்ய ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, மார்பளவு புகைப்படம், வங்கி கணக்கு புத்தகம், வயதுக்கான ஆவணத்துடன் முகாமுக்கு வந்து உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம்.